Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

Advertiesment
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
, செவ்வாய், 6 டிசம்பர் 2016 (16:13 IST)
உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் மரணமடைந்தார். 


 

 
அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக இன்று காலை முதல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 
 
தற்போது, அவரது உடல் அங்கிருந்து, ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, எம்.ஜி.ஆரின் சமாதி அருகிலேயே, அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

முன்னதாக தங்கப் பேழையில் வைக்கப்பட்டு, பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தைக் காண சாலையோரங்களிலும், கடற்கரை சாலையிலும் ஏராளமான பொதுமக்களும், கட்சி பிரமுகர்களும் காத்துக் கிடக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ.விற்கு அஞ்சலி செலுத்திய அண்ணன் மகள் தீபா