Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூரில் இருந்து ஜெ.விற்கு எதிராக சதி செய்த சசிகலா - மனோஜ் பாண்டியன் பேட்டி

Advertiesment
பெங்களூரில் இருந்து ஜெ.விற்கு எதிராக சதி செய்த சசிகலா - மனோஜ் பாண்டியன் பேட்டி
, செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (12:41 IST)
எந்த காரணத்திற்காகவும் சசிகலாவை அரசியல் நுழைய அனுமதிக்க மாட்டேன் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னிடம் உறுதி அளித்ததாக அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.


 

 
அதிமுக மூத்த தலைவர்களான பி.எச் பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் இருவரும் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது, அவர்கள் இருவரும் சசிகலாவிற்கு எதிரான கருத்துக்களை கூறினார். மேலும், ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு மர்மங்களை அவர்கள் எழுப்பினார்கள்.
 
அப்போது பேசிய மனோஜ் பாண்டியன் “ 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய போது, தனக்கு எதிராக ஒரு கூட்டம் சதி செய்கிறது. பெங்களூரில் இருந்து சதி செய்து  என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு அவர்கள் பதவியில் அமர திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, அவர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளேன் என கூறினார். அதுபோலவே சசிகலா குடும்பத்தை வெளியேற்றினார்.
 
அதன்பின், சில முக்கியமான பணிகளை அவர் எங்களிடம் வழங்கினார். அவருக்கு நாங்கள் ஆலோசனை வழங்கினோம். அதன் 3 மாதங்கள் கழித்து, மார்ச் மாதம் சசிகலா மன்னிப்பு கடிதம் எழுதிக் கொண்டு போயஸ் கார்டன் வந்து ஜெயலலிதாவை சந்தித்து பேசி ஆசிர்வாதம் வாங்கி சென்றார். இதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். 
 
அப்போது எங்களில் 5 பேரை மட்டும் ஒவ்வொருவராக மாடிக்கு அழைத்து பேசினார். என்னிடம் பேசியபோது, இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். சசிகலா குடும்பத்தினரை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன் என உறுதியளித்தார்.  எனக்கு இப்போது ஒரு உதவியாளர் தேவை. அதற்காக மட்டுமே நான் சசிகலாவை அனுமதித்துள்ளேன் என  ஜெயலலிதா என்னிடம் கூறினார்”என மனோஜ் பாண்டியன் கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதி தேவதை கையில் இருக்கிறது..தமிழகம்: பட்டுக்கோட்டை பிரபாகர்