Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா நினைவு தினம் : இரத்த தானம் கொடுத்த ஒ.பி.எஸ் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர்

jeyalalitha
, செவ்வாய், 6 டிசம்பர் 2022 (23:47 IST)
ஜெயலலிதா நினைவு தினம் உயிரை காக்கும் உதிரமாம் இரத்த தானம்  கொடுத்த ஒ.பி.எஸ் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் எம்.ஷேக் முகமது சூப்பர்.
 
கரூரில் அதிமுக ஒ.பி.எஸ் அணியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலாளர் எம்.ஷேக் முகமது தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்ச்சி.
 
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது நினைவஞ்சலி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கரூர் மாவட்ட ஒ.பி.எஸ் அணி அதிமுக சார்பில், எம்.ஜி.ஆர் இளைஞரணியின் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்ச்சி கரூர் தன்னார்வ இரத்த வங்கியில் மாவட்ட செயலாளர் எம்.ஷேக் முகமது தலைமையில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் கொடுத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆயில் ரமேஷ் முன்னிலை வகித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் வி.பி.மகேஷ் பாலாஜி, கழக மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மத்திய நகர செயலாளர் வைகிங் ராம்குமார், மாநகர துணை செயலாளர்கள் ஓம்சக்தி சேகர், பாலாஜி சுந்தரராஜன் மாநகர பிரதிநிதி அன்பரசன், மகளிரணி மத்திய மாநகர பிரதிநிதிகள் ஜானகி, கயல்விலி மற்றும் நிர்வாகிகள் என்று சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உயிர்காக்கும் இரத்த தானம் கொடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவாகவும், பலரது உயிரை காக்கும் விதமாக வாழும் வரை இரத்த தான கோட்பாட்டினை தழுவிய சம்பவம் இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், ஆங்காங்கே எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் ஷேக் முகம்மது தலைமையிலான எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள் கரூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சுமார் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்!