திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் 27 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், பக்தர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் நலனுக்காக 14 கோடியே 55 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
இது தொடர்பாகத் தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, ஜூன் 26 அன்று, தலைமைச் செயலகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் 27 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், பக்தர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் நலனுக்காக 14 கோடியே 55 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
அற நெறியையும், ஆன்மீக உணர்வையும், தனி மனித ஒழுக்கத்தையும் போற்றிப் பேணும் நெறிமுறைகளை மனிதர்களிடையே விதைத்து வேரூன்றச் செய்யும் விளை நிலங்களாகவும், புகழ் வாய்ந்த பழைய பண்பாட்டுப் பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொக்கிஷங்களாகவும் விளங்கும் திருக்கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பேணிப் பாதுகாப்பது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற அரும்பெரும் பணிகளை ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் 27 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தை ஜெயலலிதா, காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் 46 லட்சம் ரூபாய்; மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் உப கோயிலான செல்லூர் அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயிலில் 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்; கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 18 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்; விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் 20 லட்சம் ரூபாய்; திருவண்ணாமலை அருள்மிகு தி.பூ.சூரிய நாராயணர் செட்டியார் அன்னதான தேவார பாடசாலை அறக்கட்டளையில் 18 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்; தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம் அருள்மிகு வனதுர்க்கா பரமேஸ்வரியம்மன் திருக்கோயிலில் 17 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்;
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள்கோயில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்; சென்னை, கீழ்ப்பாக்கம் அருள்மிகு பாதாளப் பொன்னியம்மன் திருக்கோயிலில் 11 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்; சென்னை, பள்ளியப்பன் தெரு அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 14 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்; சென்னை,
பெசன்ட் நகர் அருள்மிகு மகாலட்சுமி (அஷ்டலட்சுமி) திருக்கோயிலில் 20 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்; சென்னை, சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்; திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயிலில் 44 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய்; திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருள்மிகு காடு அனுமந்தராயசுவாமி திருக்கோயிலில் 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயில் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்;
கும்பகோணம், அருள்மிகு சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் 10 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்; கும்பகோணம், அருள்மிகு சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில் 12 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்; விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், பெத்தவநல்லூர் அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயிலில் 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்; கடலூர் மாவட்டம், திருவகீந்திரபுரம், அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில் 25 லட்சம் ரூபாய்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறிவட்டம், குணசீலம் அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயிலில் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்; ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 46 லட்சம் ரூபாய்; என 4 கோடியே 26 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 அன்னதானக் கூடங்கள்;
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இழுவை இரயில் நிலைய காத்திருப்போர் அறை; திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம்; இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் பணியாளர்கள் நலன் கருதி 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 பணியாளர் குடியிருப்புகள்;
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் 19 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம்; ஈரோடு மாவட்டம் திண்டல்மலை, அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் 1 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புவேலி மற்றும் பேவர்பிளாக் நடைபாதை ; கடலூர் மாவட்டம், திருவகீந்திரபுரம், அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில் 1 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்;
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் 9 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; மண்டைக்காடு தேவஸ்வம் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக 28 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் கொண்ட கட்டடம்;
நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 33 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 பணியாளர் குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், இடுகம்பாளையம், அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயிலில் 12 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடம்; புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் ஓய்வு மண்டபம்;
சிவகங்கை மாவட்டம், அரியாக்குறிச்சி, அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயிலில் 41 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூரைகள்; மடப்புரம் அருள்மிகு அடைக்கலம்காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில், திருக்கோயில் பணியாளர்களுக்கென 27 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் 38 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூரை மற்றும் பேவர்பிளாக் நடைபாதை;
மதுரை மாவட்டம், அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் 7 கடைகள் கொண்ட வணிகவளாகம் மற்றும் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி; கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், முப்பந்தல் கிழக்கு அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயிலில் 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை மற்றும் குளியலறைகள்;
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டிணம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை மற்றும் குளியலறைகள்; ஈரோடு மாவட்டம், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் 12 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 உயர்கோபுர மின்விளக்குகள் ; தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சிலம்பவேளாங்காடு அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலில் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தங்கும் கூடம்;
ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாகம் மற்றும் 34 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்புகள்; திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரசாதம் தயாரிக்கும் கூடம் மற்றும் விற்பனை நிலையம்;
கும்பகோணம் வட்டம், ஒப்பிலியப்பன்கோயில் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் 19 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கருணை இல்லம்; விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வடக்கு பிரகார மண்டபம் என; -- இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மொத்தம் 14 கோடியே 83 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருக்கோயில் அன்னதானக் கூடங்கள், பணியாளர் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மானசரோவர் சென்று வந்த 146 யாத்ரிகர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 58 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் அடையாளமாக 2 யாத்ரிகர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், முக்திநாத் சென்று வந்த 10 யாத்ரிகர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் அடையாளமாக 1 யாத்ரிகருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
மேலும் திருக்கோயில்களில் பணியாற்றி பணியிலிருக்கும்போது இயற்கை எய்திய 110 திருக்கோயில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆலய ஊழியர்கள் குடும்ப நல நிதியுதவித் திட்டத்தின் கீழ் மொத்தம் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி. செந்தூர் பாண்டியன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ரா. கண்ணன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் ப. தனபால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.