மரணம் அடைந்த ஜெயக்குமார் கடிதம் எழுதி வைத்திருந்தாரா? தங்கபாலு விளக்கம்

Mahendran
சனி, 4 மே 2024 (15:41 IST)
நெல்லை மாவட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில்  அவர் கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் தனது பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து தங்கபாலு விளக்கம் அளித்துள்ளார். ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அது உண்மையான கடிதம் தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்ததற்காக, அரசு ஒப்பந்தங்களை பெற்று தருவதாக காங்., எம்.எல்.ஏ. ஒருவர் வாக்குறுதி கொடுத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பல லட்சங்களை செலவு செய்ததாக கடிதத்தில் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது’ என சந்தேகம் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ. 1,120 அதிகரிப்பு..!

குற்றாலம் , மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தடை: என்ன காரணம்?

11 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. நள்ளிரவில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு..!

5 மாத குழந்தைக்கு பால் கொடுத்த பெற்றோர்.. சில நிமிடங்களில் உயிரிழந்த பரிதாபம்..!

புத்தாண்டில் 500 ரூபாய் டிப்ஸ் கொடுத்த பயனர்.. உணவு டெலிவரி மனிதரின் நெகிழ்ச்சியான பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments