Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!

Mahendran
சனி, 4 மே 2024 (15:33 IST)
பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவு அடைந்து முடிவுகளும் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த தயாராகி வருகின்றனர் என்பதும் இப்போதே மாணவர்கள் மெடிக்கல், இன்ஜினியரிங் உள்ளிட்ட கல்லூரியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் சற்றுமுன் வெளியிட்டு உள்ள நிலையில் அது குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம் 
 
அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை மே 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடைசி தேதி மே 31 ஆம் தேதி என்றும் சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இதுகுறித்த முழு விவரங்களுக்கு அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ  இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

மேற்கு வங்கத்தில் ஒரு கோடி ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம் வாக்காளர்கள்: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments