Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இபிஎஸ் கடிதத்தை சபாநாயகர் மதிக்கனும் - ஜெயகுமார் பேட்டி!

இபிஎஸ் கடிதத்தை சபாநாயகர் மதிக்கனும் - ஜெயகுமார் பேட்டி!
, திங்கள், 17 அக்டோபர் 2022 (15:06 IST)
இபிஎஸ் கடிதத்திற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும் என இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ஜெயகுமார் பேட்டி.

 
இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால் சட்டசபையில் இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையிலேயே ஓபிஎஸ் அமர்ந்துள்ளார். அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக சார்பாக எங்களது ஜனாநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டோம். கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் சபாநாயகரை சந்தித்து பேசினோம். சட்டமன்றமே எங்களை அங்கீரித்தது பாசிட்டிவாக பார்க்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்நிலையில் இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயகுமார், இபிஎஸ் கடிதத்திற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும். இபிஎஸ் கடிதத்தை மதித்து உரிமை வழங்க வேண்டிய கடமை சபாநாயகருக்கு உள்ளது. ஓபிஎஸ் தரப்புன்னா 4 பேர்தான், இபிஎஸ் தலைமைல தான் அதிமுக இருக்கு. இபிஎஸ் தரப்பில் தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர் என  தெரிவித்துள்ளார்.
 
Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! சீமான்