மதுரையில் திறக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று மதுரையில் உள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார். இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் வரிசையாக தமிழக அரசால் திறக்கப்படும் திட்டங்கள் அனைத்திற்கும் கலைஞர் என்ற பெயரை வைக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
கலைஞர் மருத்துவமனை, கலைஞர் நூலகம், கலைஞர் பேனா சிலை என வைக்கப்படுவதற்கு பதிலாக வேறு தலைவர்களின் பெயர்களை வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்கள் நலனை செய்யாமல் கலைஞர் புகழை மட்டுமே முதல்வர் பாடிக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் கருணாநிதிக்கான பேனா சிலையை சொந்த செலவில் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளலாம் என்றும் ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார் மற்றும் பிள்ளை