Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் வியாதி உள்ள அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது? ஜெயக்குமார் பதிலடி

Siva
புதன், 29 மே 2024 (07:30 IST)
அரசியல்வாதிகளுடன் விவாதம் செய்யலாம், ஆனால் அரசியல் வியாதி உள்ள வியாபாரி அண்ணாமலையுடன் எப்படி விவாதம் செய்ய முடியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவவாதி என அண்ணாமலை சமீபத்தில் பேசியது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது என்பதும் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ’ஜெயலலிதா இந்துத்துவா தீவிரவாதி தான் என்றும் இதைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் அதிமுகவினர் யார் வேண்டுமானாலும் என்னுடன் விவாதம் செய்யலாம் என்றும் சவால் விட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ’அரசியல்வாதியோடு விவாதம் செய்யலாம், ஆனால் அரசியல் வியாதி உள்ள வியாபாரி அண்ணாமலையுடன் எப்படி விவாதம் செய்வது என்று பதிலடி கொடுத்தார்.

மேலும் அதிமுகவை பற்றி பேசி எங்களிடம் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை இப்படி பேசி வருகிறார் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments