தேனி எம்.பி. ரவிந்திரநாத் அதிமுகவில் மீண்டும் இணைப்பா?ஜெயகுமார் பேட்டி

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:22 IST)
தேனி எம்பி ரவீந்திரநாத் அவர்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் அதிமுக இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொது குழு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த பொது குழு செல்லும் என்றும் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேனி தொகுதி எம்பியும் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் மகனுமான ரவீந்திரநாத் அதிமுகவின் உறுப்பினர் இல்லை என்றும் அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே பாராளுமன்ற சபாநாயகரிடம் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதும் இனிமேல் முடிவு எடுக்க வேண்டியது சபாநாயகர் கையில் தான் உள்ளது என்றும் எங்களைப் பொருத்தவரை அவருக்கும் அதிமுகவும் சம்பந்தமில்லை என்பது நிலைமை என்றும் அவர் தெரிவித்தார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments