Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டெட்: தமிழிசைக்கு அடடே விளக்கம் கொடுத்த ஜெயகுமார்!

Advertiesment
ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டெட்: தமிழிசைக்கு அடடே விளக்கம் கொடுத்த ஜெயகுமார்!
, புதன், 12 டிசம்பர் 2018 (15:28 IST)
அதிமுகவை சேர்ந்தவரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயகுமார், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்த தமிழிசையின் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். 
 
இன்று, சென்னை வியாசர்பாடியில் உள்ள செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சமூக நலத்துறை சார்பில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு நிமோனியா தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
 
இதன் பிறகு செய்தியாளர்களில் கேள்விக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவரிடம், 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிரகு தமிழிசை கூறிய வெற்றிகரமான தோல்வி என்றால் என்ன? என கேட்கப்பட்டது. 
webdunia
அப்போது அவர் தனது வழக்கமான நையாண்டியோடு, ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டெட் என சொல்லுவார்கள் அது போலதான் போல. ஆனால், இதை சொன்னவர்களிடம்தான் அதன் அர்த்தத்தை கேட்க வேண்டும்.  
 
இது வேறு மாநில தேர்தல். 2019 நாடாளுமன்ற தேர்தல், தமிழக சட்டப்பேரவை தேர்தல், இடைத்தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் அதிமுகதான் ஜெயிக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் - வேலூரில் அதிர்ச்சி