Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயக்குமார் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

Advertiesment
ஜெயக்குமார் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
, செவ்வாய், 1 மார்ச் 2022 (18:02 IST)
5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு  வரும்  மார் 11 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்புத்தெரிவித்துள்ளது. 

சென்னை  திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தனது சகோதரரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுமானிய   நரேஷ் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கள் இருவருக்கும் பங்க்குள்ள்: அஸ்வின் ஃபிஸ்சிங் நெட் என்ற நிறுவனத்தை முன்னாள் அமைசர் ஜெயக்குமாரின் தூண்டுதலின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா இருவரும் ரூ . 5  கோடி மதிப்புள்ளாதொழிற்சாலை, திருமணமண்டபத்தை அபகரித்ததாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள், மருமகன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சரை கடந்த 25 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

ஜெயப்பிரியா மற்றும் அவரது கணவரை போலீஸார் தேடி வருகின்றானர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரை இன்றூ ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவ்வழகை விசாரித்த நீதிமன்றாம் வரும் மார்ச் 11 ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், நாளை விசாரிக்க வேண்டிய வழக்குகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதால் ஜெயக்குமார் மீதான மனு வரும் வியாழக்கிழமை அன்று பட்டியலிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஸ்டாலினின் சாதனைகள் !