Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் - அடடே இவரே சொல்லிட்டாரு

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (11:49 IST)
ஐபிஎல் போட்டியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

 
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் வெடித்தன. 
 
அந்நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பினர். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நடத்தினால் மைதானத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்திருந்தார். ஆனாலும், எதிர்ப்புகளை மீறி, கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என்பதுதான் என் கருத்து. சென்னையில் இந்த போட்டியை நடத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நானே கோரிக்கை வைத்தேன். ஆனால், அதை நடத்துவதும், நடத்தாமல் போவதும் அவர்கள் விருப்பம். அதேபோல், இந்த போட்டியை புறக்கணியுங்கள் என இளைஞர்களிடமும் கோரிக்கை வைத்தேன். ஆனால், அதையும் மீறி அவர்கள் சென்றால் நான் என்ன செய்ய முடியும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments