Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பி பிடிஆர், உனக்கு இந்த பாடல் மிகவும் பொருந்தும்: ஜெயகுமார்

Advertiesment
தம்பி பிடிஆர், உனக்கு இந்த பாடல் மிகவும் பொருந்தும்: ஜெயகுமார்
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (15:34 IST)
தம்பி பிடிஆர், உனக்கு இந்த பாடல் மிகவும் பொருந்தும்: ஜெயகுமார்
எம்ஜிஆர் படத்தின் பாடலில் உள்ள வரிகள் தற்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மிகவும் பொருந்தும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து மேலும் கூறியதாவது ’நாகரீகம் என்ற சொல்லுக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் ஏழாம் பொருத்தம் என்றும் கொஞ்சநஞ்சம் இருந்த நாகரீகத்தையும் அமெரிக்காவிலேயே அவர் விட்டுவிட்டு வந்து விட்டார் என்று கூறியுள்ளார்
 
மேலும் எம்ஜிஆரின் பாடலான ’பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவும் வரவேண்டும்’ என்ற பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தம்பி பிடிஆர், உங்களுக்கு மிகவும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் நீங்கள் பொருளாதாரத்தை புத்தகத்தில் படித்திருப்பீர்கள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் வேலை செய்து இருப்பீர்கள். ஆனால் நான் 91 ஆம் ஆண்டிலிருந்து அமைச்சர் என்ற முறையில் பொருளாதாரத்தை படித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ட்விட்டர் உலகிலிருந்து விலகி மக்களைப் பற்றி சிந்தித்து இனிமேலாவது நல்ல மாணவன் எப்படி பள்ளிக்கு தவறாமல் செல்வானோ, அதுபோல் கடமை உணர்வுடன் ஜிஎஸ்டி கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி! – டெல்லியில் அதிர்ச்சி!