Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவை சின்னம்மா என்று கூப்பிட எனக்கு நெருடுகிறது. பாத்திமா பாபு

Advertiesment
, வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (21:32 IST)
ஜெயா டிவியின் செய்தி வாசிப்பாளரும், அதிமுகவின் பேச்சாளருமான பாத்திமா பாபு இன்று திடீரென ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ஜெயலலிதா பிறந்த நாளில் இந்த முடிவை எடுத்துள்ள பாத்திமா பாபு, சசிகலா ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதையும், ஓபிஎஸ் அணிதான் உண்மையான அதிமுக என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



அவர் இதுகுறித்து கூறியதாவது:

ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தா வாயால், சசிகலாவை செய்தி வாசிக்கும்போது சின்னம்மா என்று அழைக்க சொல்லியது எனக்கு நெருடலை தந்தது. அதனால்தான் மக்களின் முதல்வராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளேன்.

“மக்களுக்காக இறங்கி வந்து பணியாற்றும் பண்பும், மக்களோடு மக்களாகப் பழகும் தன்மையும், பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் குணமும் ஓபிஎஸ் அவர்களிடம் மட்டும்தான் இருக்கிறது. தற்போதைய முதல்வருக்கு 122 எம்.எல்.ஏக்க மட்டும்தான் ஆதரவு கொடுத்துள்ளார். ஆனால் ஒன்றரைக் கோடி கட்சித் தொண்டர்களும், ஏழு கோடிக்கும் மேலான தமிழக மக்களும் அம்மா வழி நடக்கும் பன்னீர் செல்வத்தின் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால் உண்மையான அ.தி.மு.க கட்சியும் ஓ.பி.எஸ் வசம்தான் இருக்கிறது. என்று பாத்திமா பாபு கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகரில் தீபா போட்டி. தாக்குப் பிடிப்பாரா தினகரன்?