Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்ரீத் பண்டிகைக்கு 2 நாட்கள் விடுமுறை: தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (10:13 IST)
இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்கு வியாழக்கிழமை அரசு விடுமுறை என்ற நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
"தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப்படவிருக்கும் நிலையில் ஜூன் 30 வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். 
 
 ஜூலை 1 மற்றும் ஜூலை 2 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளிக் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் முஸ்லிம் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் தனது சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாடித் திரும்புவதில் சிரமம் இருக்காது. மேலும், ஒருசில கல்வி நிறுவனங்களில் ஜூன் 30 அன்று தேர்வுகளும் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 
சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூன் 30-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்
 
இவ்வாறு தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது எங்கே? பாலச்சந்திரன் பேட்டி..!

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

அடுத்த கட்டுரையில்
Show comments