Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாயைவிட்டு மாட்டிக்கொண்ட தளபதியார்: டிவிட்டரில் டிரெண்டாகும் #ஜப்பான் துணைமுதல்வர் ஸ்டாலின்

வாயைவிட்டு மாட்டிக்கொண்ட தளபதியார்: டிவிட்டரில் டிரெண்டாகும் #ஜப்பான் துணைமுதல்வர் ஸ்டாலின்
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (12:22 IST)
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின் நான் ஜப்பானின் துணை முதலமைச்சராக இருந்த போது என வாய் உளறி பேசியதை நெட்டிசன்கள் #ஜப்பான் துணைமுதல்வர் ஸ்டாலின் என டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
 
ஸ்டாலின் திமுகவின் தலைவராகப் பதவியேற்றதில் இருந்து கலைஞரைப் போல ஓயாமல் பொதுக்கூட்டங்கள், மக்கள் பணிகள் என தமிழகமெங்கும் பம்பரமாய் சுற்றி வருகிறார். 
 
முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மேடைப் பேச்சிலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சாதூர்யமாகப் பதில் சொல்வதிலும் உலகப் புகழ் பெற்றவர். ஆனால் ஸ்டாலினோ மேடைகளில் பேசும்போது கலைஞரை போல மடைதிறந்த வெள்ளம் போல பேசாமல் நிறுத்தி நிதானமாகப் பேசக்கூடியவர். 
 
மேலும் கலைஞர் எந்த விதமானக் காகிதங்கள் மற்றும் குறிப்புகள் இன்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசக்கூடியவர். ஆனால் ஸ்டாலின் தனது கைகளில் குறிப்புகள் அடங்கிய துண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்.
webdunia
 
நான் ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசவில்லை, யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என தவறாகப் பழமொழிகளைக் கூறி சிக்கலில் சிக்கியும் வருகிறார். மேடைகளில் ஸ்டாலின் கையில் பேப்பரை வைத்து பேசுவதால் அவரை துண்டு சீட்டு ஸ்டாலின் எனக் கேலி செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், நான் ஜப்பானின் துனை முதலமைச்சராக இருந்தபோது என தெரியாமல் பேசிவிட்டார். இதனை நேற்று நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவிட்டு அதனை டிரெண்டாக்கிவிட்டனர். தொடர்ந்து பல மீம்ஸ்களும், கருத்துக்களும் டிவிட்டரில் வைரலாகி வருகின்றன.
webdunia
webdunia


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காக்கா யோகா செய்யும் முதல்வர்: கிரண்பேடி கடும் விமர்சனம்