ஜனவரி 11ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (13:05 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் சிறப்பு விசேஷ நாட்கள் வரும் போது அந்தந்த மாவட்டத்திற்கு மற்றும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவிப்பு செய்வார்கள் என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் தியாகராஜ ரின் 166வது ஆராதனை விழா நடைபெறுவதை அடுத்து தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 
 
மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வேறு ஒரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
 
தஞ்சை மாநகரில் தியாகராஜரின் 166வது ஆராதனை விழா மிகவும் விசேஷமாக கொண்டாட இருப்பதை அடுத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்.. பயந்துபோய் தீக்குளித்து உயிருக்கும் போராடும் மாணவி..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: 25 பேர் பலி; நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட சோகம்!

என் கணவர் என்னை மோசம் செய்துவிட்டார், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. மோடிக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments