Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூவத்தூரில் ஜாமர் கருதி பொருத்தப்பட்ட விவகாரம் - உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

கூவத்தூரில் ஜாமர் கருதி பொருத்தப்பட்ட விவகாரம் - உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
, சனி, 11 மார்ச் 2017 (12:34 IST)
அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்படிருந்த கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம், தமிழக உயர் அரசு அதிகாரிகளுக்கு உதறலை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே ஹபுஸ் ரிசார்ட்டில் கடந்த மாதம் 8ம் தேதி தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. 
 
எனவே, எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு, சுதந்திரமாக முடிவெடுக்க விடாமல், பலவந்தமாக கூவத்தூரில் அடைத்து வைத்திருப்பதாக ஓ.பி.எஸ் ஆளுநரிடம் புகார் அளித்தார். மேலும், எம்.எல்.ஏக்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கூவத்தூர் விடுதியில் செல்போன் நெட்வொர்க்கை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவி பொறுத்தப்பட்டிருக்கிறது, இது சட்டப்படி குற்றம். எனவே, அனைத்து எம்.எல்.எக்களையும் மீட்க வேண்டும் என ஆளுநரிடம் அளித்த புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

webdunia

 

 
இந்த புகார் மனுவை ஆளுநர் வித்யசாகர் ராவ் மத்திய அரசிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, உடனே களம் இறங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்,  ரகசிய ‘ரா’ பிரிவு அதிகாரிகளை கூவத்தூருக்கு அனுப்பி விசாரித்தது.  அப்போது கூவத்தூரில் ஜாமர் கருவி இருப்பதைக் கண்டுபிடித்த ‘ரா’ அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
 
இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து விரிவான விளக்கம் கேட்டு, தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜிபி ஆகிய மூவருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதற்கு என்ன பதில் அளிப்பது என்பது தெரியாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உயர் அதிகாரிகள் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணத்துக்கும், அதிகாரத்திற்கும் மட்டுமே அரசியலில் இடம்: 16 வருட போராட்டத்தின் பலன் 100க்கும் குறைவான ஓட்டு!!