Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’யார் கூறியும் கலையாத போராட்டக்காரர்கள்’ - மெரீனாவில் பரபரப்பு!

’யார் கூறியும் கலையாத போராட்டக்காரர்கள்’ - மெரீனாவில் பரபரப்பு!
, திங்கள், 23 ஜனவரி 2017 (18:45 IST)
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தும், மற்றைய போராட்டக்காரர்கள் கூறியும் சென்னை மெரீனாவில் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே போராடி வருகிறார்கள்.


 

நேற்று இரவு செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஆதி, “ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் இப்படி திசையே தெரியாமல் போய் கொண்டிருக்கிறதே என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் தற்போது வேறு திசையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறதே என்ற வருத்தத்திலேயே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.

ஹிப் ஹாப் ஆதிக்கு பதிலடி கொடுத்த, ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்கள், ”தாங்கள் போராட்டக் களத்தை விட்டு வெளியேறியதற்கு காரணமாக, நமது பிரதமர் அவர்களை நாங்கள் வசை பாடுவதை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஜல்லிக்கட்டு என்பது எங்கள் போராட்டத்திற்கான ஒரு கருவி மட்டுமே” என்று கூறியிருந்தனர்.

இதற்கிடையில் சென்னை மெரீனாவில் பேசிய ராகவா லாரன்ஸ், “7 நாட்களாக இந்த போராட்டம் மாணவர்கள் கையில் இருக்கும் வரை அமைதியாக இருந்தது. ஜல்லிக்கட்டுக்காக போராடினோம். அதற்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது” என்று கூறியிருந்தார்.

ஆனால், இந்த பதிலுக்கு எல்லாம் திருப்தியடையாததால் போராட்டக்காரர்கள் கலைய மறுத்து, சென்னை மெரீனாவை விட்ட அகல மறுத்து அங்கேயே அமர்ந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடற்கரையில் இருந்து நகருக்குள் நகர்ந்த போராட்டம்