Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை: திமுக ஆட்சிக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு

Advertiesment
சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை: திமுக ஆட்சிக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு
, வியாழன், 20 மே 2021 (13:09 IST)
அதிமுக பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறிவரும் கட்சிகளாக இருந்து வந்தன. குறிப்பாக திமுக விடுதலைச் சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஜக்கிவாசுதேவ்வை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று திடீரென இனிமேல் ஜக்கி வாசுதேவ் குறித்து பேச மாட்டேன் என அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தற்போது ஜக்கி வாசுதேவ் திமுக ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் - சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்...
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளம் பட்டொளி வீசி பறக்கட்டும்: பினரயி விஜயனுக்கு கமல் வாழ்த்து