5 நாட்களாக தொடர்ந்த வருமான வரி சோதனை நிறைவு...

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2017 (15:59 IST)
சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என கடந்த 5 நாட்களாக நீடித்த வருமான வரிச் சோதனை தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.


 

 
ஜெயா தொலைக்காட்சி, தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் என 215 இடங்களில்  வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக அதிரடி சோதனை செய்து வந்தனர். இதில் சில இடத்தில் மட்டும் சோதனை முடிவிற்கு வந்துள்ளது. ஆனால், ஜெயா தொலைக்காட்சி, இளவரசி மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோரின் வீடுகளில் 5 நாளாக இன்றும் சோதனை நடைபெற்றது.
 
இந்த சோதனையில், 200க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் எனவும், பல கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கிறது எனவும், பினாமி பெயரில் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
 
இந்நிலையில், 5 நாட்களாக நீடித்த வருமான வரிச்சோதனை இன்று மாலை முடிவிற்கு வந்துள்ளது. சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் தொடர்பாக குறுக்கு விசாரணைதான் தற்போது நடைபெற்று வருவதாகவும், ஆவணங்களின் உண்மைதன்மை பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடக்கிறது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
மேலும், ஆவணங்களை சரி பார்க்கும் பணி நடைபெறுகிறது எனவும், அதன் பின் அறிக்கை தயார் செய்யப்பட்டு, தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு மீண்டும் விசாரணை செய்யப்படும் எனவும் வருமன வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments