Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருமான வரித்துறை சோதனைக்கு தகவல் கொடுத்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

வருமான வரித்துறை சோதனைக்கு தகவல் கொடுத்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

, வெள்ளி, 10 நவம்பர் 2017 (08:46 IST)
தமிழகத்தில் நேற்று எங்கு திரும்பினாலும் ஒரே ரெய்டு மயம். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் 190 இடங்களில் சோதனை நடத்தி அதிரடியை காட்டியது மத்திய அரசு நேற்று. இந்த அதிரடி சோதனைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் மத்திய அரசுக்கு அளித்த தகவல்களே காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவின் பல விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜக அந்த கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பாஜகவின் கட்டுப்பாட்டில் முதன் முதலாக வந்தவர் ஓபிஎஸ். அவர் அதிமுகவின் நிதி தொடர்பாக பல தகவல்களை டெல்லிக்கு அளித்ததாக கூறப்படுகிறது.
 
அதன் பின்னர் ஈபிஎஸ் முதல்வராக வந்த பின்னர் அவரும் டெல்லிக்கு விசுவாசம் காட்ட அவரும் தனது பங்கிற்கு பல தகவல்களை அளித்துள்ளார். இந்த தகவல்களை வைத்து அதிமுகவின் பணத்தை கைப்பாற்ற தான் இந்த அதிரடி சோதனை நடத்தப்படுகிறது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் பணம் எங்கே இருக்கிறது என்ற ரகசியம் சசிகலா ஒருவரை தவிர வேறு யாருக்கும் தெரியாதாம். இதனால் ரெய்டில் எந்த தகவலும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர்செல் தமிழகத்தில் இருக்கும், வதந்திகளை நம்ப வேண்டாம்; குறுந்தகவலில் விளக்கம்!!