Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதனை இன்னும் முடியவில்லை : சசி குடும்பத்திற்கு ஷாக் கொடுக்கும் வருமான வரித்துறை

Advertiesment
சோதனை இன்னும் முடியவில்லை : சசி குடும்பத்திற்கு ஷாக் கொடுக்கும் வருமான வரித்துறை
, வெள்ளி, 17 நவம்பர் 2017 (10:54 IST)
எங்கள் சோதனை இன்னும் முடியவில்லை. மேலும் தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடு, அலுவலகங்கள் என 187 இடங்களில் 1600 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல ஆவணங்களும், தங்க மற்றும் வைர நகைகளும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.
 
தற்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களை அலுவலகதிற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதில் கிடைக்கும் தகவலை வைத்து, மேலும் சில இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
 
ஏற்கனவே, சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களின் 15 வங்கி லாக்கர்கள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. விரைவில், அந்த லாக்கர்களை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தவுள்ளனர். அதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்படும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், சோதனை மேலும் தொடரும் என அதிகாரிகள் அறிவித்திருப்பது, சசிகலா குடும்பத்தினரிடம் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநர் ஆய்வு நடத்தியது ஆரோக்கியமான விஷயம்: அமைச்சர் செல்லூர் ராஜூ அடடா விளக்கம்!