Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 3 மே 2018 (13:23 IST)
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 
கோடைக்காலம் என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் வெயில்  கொளுத்தி வருகிறது. நாளை அக்கி நட்சத்திரம் தொடங்கவுள்ளதால், மே 25ம் தேதி வரை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேசமயம், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என நேற்று செய்தியாளர் சந்திப்பில் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 
அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருப்பது அந்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு: எத்தனை உயிரிழப்புகளை அரசு வேடிக்கை பார்க்கும்?

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments