Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் எல்லை தாக்குதலை விட மோசமானது இது? - முத்தரசன் காட்டம்

பாகிஸ்தான் எல்லை தாக்குதலை விட மோசமானது இது? - முத்தரசன் காட்டம்
, திங்கள், 3 அக்டோபர் 2016 (20:05 IST)
முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம் இருக்கிறார். இது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் தாக்குவதை விட மிக மோசமாகும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
 

 
இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “காவிரியில் முறையாக கர்நாடாக தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
சுப்ரீம் கோர்ட் பல முறை உத்தரவிட்டும் மீண்டும் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசும் தயக்கம் காட்டி வரும் நிலையில் கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம், சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி விவாதிக்கப்படுகிறது.
 
முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம் இருக்கிறார். இது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் தாக்குவதை விட மிக மோசமாகும்.
 
தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படாமல் உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே அந்த பட்டியல் அதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தான் தேர்தல் தேதி அறிவித்த மறு நாளே அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். அதன் மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கிறார்கள்.
 
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த உண்மை நிலையை தமிழக தலைமை செயலாளர் மக்களுக்கு தெரிவிக்க உரிமை உள்ளது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெங்கு காய்ச்சல் விவகாரம்: சுகாதார மந்திரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்