Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாக்குவது மிகுந்த வேதனை -எடப்பாடி பழனிசாமி

அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாக்குவது மிகுந்த வேதனை -எடப்பாடி பழனிசாமி
, செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (15:52 IST)
திமுக அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாக்குவது மிகுந்த வேதனைக்குரியது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளி கல்வி துறையில்

LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கிலோ தக்காளி ரூ.5க்கு விற்பனை: வேதனையில் தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயி..!