Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்களை பாதுகாப்பது நம் பொறுப்பு! - இந்தியா விரைந்து செயல்பட சத்குரு வலியுறுத்தல்!

Prasanth Karthick
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (08:20 IST)

வங்கதேசத்தில் இந்து மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து சத்குரு அவர்கள் எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்களை பாதுகாப்பது நம் பொறுப்பு, இதில் நம் பாரத நாடு விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

 

 

சத்குருவின் எக்ஸ் பதிவில் "இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. நம் அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்காக நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது. இந்த நாட்டின் அங்கமாக இருந்தது, துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகிவிட்டது. ஆனால் நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்களை, இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு" எனப் பதிவிட்டு உள்ளார்.

 

அவரின் இந்தப் பதிவில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்வவங்கள் குறித்து அந்நாட்டில் வெளியாகும் 'த டைலி ஸ்டார் (The Daily Star)' என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியையும் பகிர்ந்து உள்ளார்.

 

மேலும் இது தொடர்பாக அவர் பகிர்ந்த மற்றொரு எக்ஸ் பதிவில் "நம் அண்டை நாட்டின் துரதிர்ஷ்டவசமான நிதர்சனம். மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை ஒருபோதும் ஆட்டிப்படைக்காதவாறு நாம் உறுதி செய்வோம்" எனப் பதிவிட்டு உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments