Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பிற்கு உரிமை கோருவது நியாயமல்ல! - தொல்.திருமாவளவன்!

Advertiesment
Thiruma

Prasanth Karthick

, வியாழன், 15 மே 2025 (09:51 IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அரசியல் கட்சிகள் உரிமைக் கொண்டாடுவது குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

 

2019ல் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கில் சமீபத்தில் 9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து அதிமுக, திமுகவினரிடையே சில விவாதங்கள் நடந்தது.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்திற்கு களங்கம் விளைவித்த ஒன்று. இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே நடக்கக் கூடாது என்ற அளவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தாலும், அரசு தரப்பில் வக்கீல்கள் உறுதியாக நின்று வாதாடி இருக்கிறார்கள். அவர்களையும் பாராட்டுகிறேன். இந்த வழக்கின் தீர்ப்புக்கு திமுக, அதிமுக, விசிக என யாருமே உரிமைக் கோருவதில் நியாயம் இல்லை. 

 

ஆதாரங்கள் வலுவாக இருந்தன. அதனால்ம் அவர்களால் தப்பிக்க முடியவில்லை. யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!