தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (11:45 IST)
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு மழை பெய்த நிலையில், இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,

“கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக விமான நிலையத்தில் 7 செ.மீ. மழையும், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. ஆலந்தூரில் சுமார் 3 மணி நேரத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.” எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில், குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம், விருதுநகர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், காரைக்கால் ஆகிய பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்யகூடும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments