Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்திரனை அடுத்து செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு பயணம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!

Advertiesment
சந்திரனை அடுத்து செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு பயணம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!
, ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (10:01 IST)
சந்திரனை அடுத்து செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு பயணம் செய்யும் திட்டம் இந்தியாவுக்கு உள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.  
 
சமீபத்தில் சந்திரனில் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக இறங்கியது என்பதும் அதிலிருந்து ரோவர் தற்போது புகைப்படங்களை அனுப்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், சந்திரனை அடுத்து செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு பயணம் செய்யும் திட்டம் இந்தியாவுக்கு உள்ளது என்றும் இதற்கு அதிக முதலீடு தேவை என்று தெரிவித்தார். 
 
விண்வெளி துறை வளர்ச்சி அடைவதன் மூலம் முழு தேசமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் அதுதான் எங்கள் நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும் பிரதமர் மோடி எங்களுக்கு கொடுத்த இலக்கை செயல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக மாநாடு நடத்தல.. கலை நிகழ்ச்சிதான் நடத்தினாங்க! – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!