Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொட்டை அடித்து பெண்களை வசியம் செய்து வைத்துள்ள ஈஷா யோக மையம்

மொட்டை அடித்து பெண்களை வசியம் செய்து வைத்துள்ள ஈஷா யோக மையம்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (13:51 IST)
மொட்டை அடித்து வசியம் செய்து வைத்துள்ள தங்கள் பெண்களை ஈஷா யோக மையத்திலிருந்து மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர்.


 
ஓய்வு பெற்ற பேராசிரியர் காமராஜ், தனது மனுவில், “ எங்கள் மகள்கள் கீதா (33) மற்றும் லதா (31), சிறுது நாட்களுக்கு முன்பு, ஈஷா யோக மையத்தில் யோகா கற்க சென்றனர். அந்த மையம் அவர்கள் இருவரையும் மூளை சலவை செய்து அங்கேயே இருக்கும் படி செய்துவிட்டனர். மேலும், தன்னை தானே கடவுள் என்று கூறி கொள்ளும், அந்த மையத்தின் தலைவர் ஜக்கி வாசுதேவ், எங்கள் இரு மகள்களையும், மொட்டை அடித்து, காவி வஸ்திரத்தை அணிய வைத்து, மற்ற வெளியுலக மக்களுடன் சேர விடாமல் தடுக்கின்றார். எம்.டெக், பி.டெக், போன்ற பட்டப்படிப்புகளை படுத்துவிட்டு, உயர் தர நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த என் மகள்களை அவர் வசியம் செய்து, எங்கள் சொத்துக்களை அபகரிக்க பார்கின்றார். தங்கள் மகள்களை ஈஷா யோக மையத்திலிருந்து மீட்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

ஈஷா யோக மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் இருவரும் தங்கள் விருப்பத்துடன் தான் ஈஷா யோக மையத்தில் தன்னார்வ வேலை பார்த்து வருகின்றனர் என்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments