Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈஷா யோகா மைய கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டதா?

ஈஷா யோகா மைய கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டதா?
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (10:51 IST)
ஈஷா யோகா மையத்தின் கட்டிடங்கள் வனத்துறை அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக அம்மையத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. ஈஷா யோகா மையத்தில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் சதுர அடி கட்டிடங்கள் கட்டிட அனுமதியின்றி விதிமுறைகளை கட்டப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி சமூக ஆர்வலர்கள் வெளிக் கொண்டு வந்தனர்.
 
மேலும், இந்த யோகா மையம் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாகவும், யானை வழித்தடங்களை மறித்து கட்டிடங்களை எழுப்பி உள்ளதாகவும் வன ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அம்மையத்தின் செய்தி தொடர்பாளர் ஏகா மற்றும் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர், ’வனநிலங்களை ஈஷா மையம் ஆக்கிரமிப்பு செய்யப்பட வில்லை எனவும், யானைகளின் வலசை பாதைகளை ஆக்கிரமிக்கவில்லை’ எனவும் மறுப்பு தெரிவித்தனர்.
 
முறைப்படி கட்டிட அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, ’கட்டிடங்கள் கட்டுவதற்கு வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை எனவும், அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தனர்.
 
மேலும், கட்டிட அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், வனத்துறை தவிர அனைத்து பிரிவு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
அனுமதியின்றி கட்டிடங்களை ஈஷா யோகா மையத்தினர் கட்டியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் புகார் அளித்து வந்த நிலையில், அம்மையத்தின் செய்தி தொடர்பாளர்களே அதனை ஒப்புக்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா ஆட்டம் ஆரம்பம்: வைகுண்டராஜனின் விவி மினரல்ஸுக்கு செக்!