Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா ஆட்டம் ஆரம்பம்: வைகுண்டராஜனின் விவி மினரல்ஸுக்கு செக்!

ஜெயலலிதா ஆட்டம் ஆரம்பம்: வைகுண்டராஜனின் விவி மினரல்ஸுக்கு செக்!
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (10:35 IST)
தென் மாவட்டங்களில் கனிம மணலை வெட்டி எடுக்கும் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸுக்கு கனிம மணல் ஏற்றி சென்ற 3 லாரிகளை மடக்கி பிடித்த அதிகாரிகள் அதில் இருந்த 30 டன் கனிம மணல்களை பறிமுதல் செய்தனர்.


 
 
அதிமுக உடன் நெருக்கமாக இருந்து அரசியல் செல்வாக்குடன் விளங்கி வந்த வைகுண்டராஜனுக்கும், அதிமுக தலைமைக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதால் அவர் அதிமுகவுக்கு எதிராக செயல்படுவதாக கிசுகிசுக்கப்பட்டது.
 
இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் கனிம மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்தார் ஜெயலலிதா. பின்னர் ஆட்சிக்கு வந்த பின்னரும் கனிம மணல் விற்பனையே அரசே ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்தது.
 
இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வைகுண்டராஜனின் ஆதரவில் தான் அதிமுகவில் ஐக்கியமாகியதாக கூறப்பட்டது.
 
மேலும், தற்போது சசிகலா புஷ்பா அதிமுகவுக்கு எதிராகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் செயல்படுவதற்கு பின்னணியில் வைகுண்டராஜன் இருப்பதாகவும் பேசப்படுகிறது.
 
இதனையடுத்து நேற்று நெல்லை அருகே கொடைவிளையில்  வைகுண்டராஜனின் விவி மினரல்ஸுக்கு கணிம மணல் ஏற்றி சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அந்த லாரிகளில் இருந்த 30 டன் கனிம மணல் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
ஏற்கனவே கனிம மணல் விற்பனையை அரசு ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சசிகலா புஷ்பா விவகாரத்தில் வைகுண்டராஜனின் பெயர் அடிபடுவதால் ஜெயலலிதா தனது அதிரடியை தொடங்கி விட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசுகிறார்கள். அரசு தனது சாட்டையை கையில் எடுத்துள்ளதால் வைகுண்டராஜன் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடவுளின் பிரநிதிகள் என கூறும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாற வேண்டும் - கே.பாக்யராஜ்