இது இந்தியாவா? ’இந்தி’- யாவா? என ட்விட்டரில் ஸ்டாலின் கேள்வி

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:45 IST)
திமுக எம்பி கனிமொழி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எப் ஊழியர் ஒருவர் ஹிந்தியில் கேள்வி கேட்டதாகவும் எனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேட்குமாறு கூறியதாகவும் அதற்கு அவர் நீங்கள் இந்தியரா? எனக் கேட்டதாகவும் பதிவு செய்திருந்தார்.
 
இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த கருத்துக்கள் பதிவாகி வந்தனஇதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMKவை பார்த்துக் கேட்டுள்ளார்.

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?
பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments