Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க வில் ஒரு கோடி இந்துக்கள் உள்ளனரா ? தி.மு.க விற்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க மாவட்ட தலைவர் சிவசாமி

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (23:37 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் கடவுளான முருகனை பழித்து பேசியதோடு, கந்தசஷ்டி கவசம் என்கின்ற புனிதத்தினை கருப்பர் கூட்டம் என்கின்ற யூடியூப் சேனல் தற்போது உலகளவில் வைரலாகி வரும் நிலையில், முருகனைப் பழித்துப் பேசியது கண்டிக்கத் தக்கது என்று கூறியுள்ள தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கறுப்பர் கூட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு என்று ட்விட்டர் மூலம் போலிக்கணக்கு உருவாக்கி மோசடி நடைபெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளதோடு, தி.மு.க வில் ஒரு கோடி இந்துக்கள் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் கே.சிவசாமி., தி.மு.க மற்றும் தி.க ஆகிய கட்சிகளில் மட்டுமில்லாமல், உண்மையான இந்துக்கள்,. தி.மு.க வினை சார்ந்துள்ள கூட்டணி கட்சிகளையும் நம்ப மாட்டார்கள். மேலும், கருப்பர் கூட்டம் என்கின்ற யூடியூப்பினை தடைசெய்வதோடு, அந்த கருத்தினை பதிந்தவர்கள் மேலும் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டுமென்றார். மேலும், தமிழ் கடவுளான முருகப்பெருமானை ஆபாசமாக சித்தரித்துள்ளவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல், அதற்கு துணையாக பேசி வரும் தி.மு.க வினர் திடீரென்று அந்த செயலை செய்ய வில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும் வரும் 2021 ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு,க கட்சியும், அதனை சார்ந்துள்ள கூட்டணியும் கடும் தோல்வியை சந்தித்திக்கும் என்றார். கரூரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தகவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது..

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments