ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவதற்கு வாய்ப்பில்லை என்று கட்சிவட்டாரங்கள் தகவல் வெளியாகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் வரும் 24-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தேவைப்பட்டால் தேர்தலை அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஏற்கனவே காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் காங்கிரஸ் தலைவராக வேண்டுமென ராகுல்காந்தி கூறியிருந்த நிலையில், ஜி23 என்று அழைக்கப்படும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகினர்.
இந்த நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட வில்லை என்றால் தான் போட்டியிட விரும்புவதாக சமீபத்தில் சசிதரூர் தெரிவித்திருந்தார்.
எனவே, நேற்று, அவர் சோனியா காந்தியை திடீரென சந்தித்து கட்சி நிலவரம் குறித்து பேசியதாகத் தெரிகிறது.
மேலும், தற்போது ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையை கேரளாவில் மேற்கொண்டு வரும் நிலையில், ராகுல் காந்தி இத்தேர்தல் பற்றி சட்டை செய்யவில்லை எனத் தெரிகிறது.
அதனால்ல, கட்டாயம், ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் நிச்சயமாக போட்டியிடப் போவதில்லை என்று கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
ஆனாலும், ஒரு சில காங்கிரஸ்காரர்கள் ராகுல் காந்தி மீண்டும் தலைவராகவே விருப்பப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.