வலுவிழக்கப் போகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? மழை குறையுமா? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (09:36 IST)

வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அது மெல்ல வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

 

வங்க கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. ஆனால் இது புயலாக மாறுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளதாக கூறப்பட்டது.

 

தொடர்ந்து தென்மேற்கு பகுதியில் நகர்ந்து வந்த இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்ந்து மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் வட தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான அளவில் மழையும், ஆந்திரா பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments