Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலைக்கு மட்டும் உயிருள்ளதா? கனிமொழிக்கு எச்.ராஜா பதிலடி

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (08:32 IST)
உயிரற்ற பட்டேலின் சிலைக்கு ரூ.3000 கோடி, உயிருள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி ரூ.350 கோடியா? என திமுக எம்பி கனிமொழி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

திமுகவின் மற்ற தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தாலும் கனிமொழி எம்பியை பொருத்தவரையில் பாஜகவுடன் இணக்கமாக இருந்ததாகவே கூறப்பட்டது. ஆனால் அவரும் தற்போது மத்திய அரசை விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கனிமொழியின் இந்த டுவீட்டுக்கு பதிலடி தரும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியபோது, 'குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை, ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா? என கனிமொழிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்களிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவாகி கொண்டிருக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments