மதுவந்தியின் மகன் படிப்பது வேறு பள்ளியிலா? நெட்டிசன்கள் விமர்சனம்

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (22:45 IST)
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
 

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டு வருவதால் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்மன் அனுப்பிய காவல்துறையினர் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் சமீபத்தில் 3 மணி நேரமாக விசாரணை செய்தனர். மேலும் பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றும் இந்தப் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் சில மாணவிகள் புகார் அளித்தனர். இதனால் விசாரணை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்ட ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். ஆனால் இதற்கும் தனக்கும் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லை; தந்தை இப்பள்ளியில் டிரஸ்டி என்றும் தான் முன்னாள் மாணவிஎன்றூம் கூறினார்.

சென்னையில் மிக முக்கியப் பள்ளி என்ற பெயருடைய பத்மா ஷேஷாத்ரி பள்ளியின் மதுவந்தியில் மகன்  ரித்விக் படிக்காமல்,  ஊட்டியில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் படித்துவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்