திமுக அரசு மகளிர் வாழ்க்கையில் விளையாடுவது சரியா?'' -வானதி சீனிவாசன்

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (19:42 IST)
தீபாவளி என்பது குடும்பத்துடன் கொண்டாடப்படும் நாளா? இல்லை குடியோடு கொண்டாடப்படும் நாளா? என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது:

''நாடெங்கும் மக்கள் தீபாவளி கொணடாட தயாராகி வரும் வேலையில். அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு  ஊழியர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள் கொடுத்து வருகின்றனர். 
 
ஆனால் தமிழக மக்களுக்கு தமிழக அரசின் கொடுத்த தீபாவளி பரிசு என்ன தெரியுமா ? " 2 வகை பீர்கள்"
 
இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்கள் வரும் என கூறுவது தான் "தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர துடிக்கும் அரசின் நோக்கமா ?
 
இது தான் திராவிட அரசின் சாதனைகளா? 
 
தீபாவளி என்பது குடும்பத்துடன் கொண்டாடப்படும் நாளா? இல்லை குடியோடு கொண்டாடப்படும் நாளா ?
 
மகளிர் பற்றி அக்கறை காட்டுவதாக கூறும் திமுக அரசு அதே மகளிர் வாழ்க்கையில் விளையாடுவது சரியா?''  என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி என்பது குடும்பத்துடன் கொண்டாடப்படும் நாளா ? இல்லை குடியோடு கொண்டாடப்படும் நாளா ?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments