Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக மக்களவை வெற்றி பாஜக எதிர்ப்பு மனநிலையா? – இடறிய இடைத்தேர்தல்!

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (12:38 IST)
தமிழக சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிமுக பெருவாரியான வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தற்போது நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை இடைத்தேர்தல் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்க தமிழக தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக பெருவாரியான வெற்றிப் பெற்றது. இதனால் திமுகவினர் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் திமுகவே ஆட்சியமைக்கும் அதற்கான முன்னோட்டம்தான் இந்த மக்களவை தேர்தல் வெற்றி என்று கூறி வந்தனர். இந்நிலையில் இரண்டு சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் கூட திமுகவே வெற்றி பெறும் என திமுக அபிமானிகள் கணித்தனர்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி அதிமுக அதிக வாக்குகள் முன்னிலையில்      இருக்கிறது. இதனால் மக்களவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றி தமிழகத்தில் உள்ள பாஜக எதிர்ப்பு மனநிலையினால் ஏற்பட்ட வெற்றியா? என கேள்வி எழுந்துள்ளது. மக்களவையில் மாஸ் காட்டிய திமுக, சட்டப்பேரவையில் சறுக்கலை சந்தித்திருப்பது திமுகவினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒருபக்கம் இடைத்தேர்தல் என்பதால் ஆளும்கட்சி சார்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவது இயல்புதான் என்றும், முழுதான சட்டப்பேரவை தேர்தலின்போது வலிமையான கட்சி வெற்றிபெறும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments