Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டணிகளை கழட்டி விடுகிறதா திமுக? – பிரசாத் கிஷோர் வியூகம்!

கூட்டணிகளை கழட்டி விடுகிறதா திமுக? – பிரசாத் கிஷோர் வியூகம்!
, புதன், 26 பிப்ரவரி 2020 (09:48 IST)
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் இல்லாமல் தன்னிச்சையாக தேர்தலை திமுக எதிர்கொள்ள திட்டமிடுவதாக பேசிக்கொள்ளப்படுகிறது.

கடந்த 2011 தேர்தலில் பெரும் சரிவை சந்தித்த திமுக தனது கட்சியை மீண்டும் வலுப்படுத்த தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி இறந்த பிறகு தலைவர் பதவிக்கு வந்த மு.க.ஸ்டாலின் ஆரம்பத்தில் கூட்டணிகளை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதாவிட்டாலும், தற்போதைய அரசியல் வியூகங்களில் கூட்டணி கட்சிகளையும் கருத்தில் கொண்டே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக பிரசாத் கிஷோரின் ஐபேக் நிறுவனம் களம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் திமுகவின் நிலைமை குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பிரசாத் கிஷோர் தற்போதைய நிலையில் திமுக தனித்து போட்டியிட்டாலே வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளாராம்.

ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் செய்த தவறை போல மற்றுமொரு முறை செய்ய திமுக தயாராக இருக்காது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.பாரதி ”திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையேயான உறவு மிகவும் உறுதியாக உள்ளது. கூட்டணி கட்சிகளோடு இணைந்தே தேர்தலை எதிர்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

ஒருவேளை தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பிருக்கும் பட்சத்தில் திமுக கூட்டணியை ஆதரிக்குமா என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து ஒரு சர்வே எடுத்து பார்க்க ஐபேக் நிறுவனம் உத்தேசித்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோமாவில் திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் – தொண்டர்கள் சோகம் !