Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் செல்லும் இடத்திற்கு முன்கூட்டியே செல்லும் திமுக.. அவ்வளவு பயமா?

Mahendran
வியாழன், 29 மே 2025 (11:45 IST)
விஜய் எங்கு செல்கிறாரோ, அந்த இடத்திற்கு முன்கூட்டியே அல்லது விஜய் சென்ற அடுத்த நாளோ திமுக சென்று வருவதை பார்க்கும் போது, விஜய்யின் அரசியல் கட்சியை பார்த்து திமுக பயந்து நடுங்குவதாக பத்திரிகையாளர் மணி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
கோவையில் பூத் கமிட்டி மாநாட்டை விஜய் பிரம்மாண்டமாக நடத்திய நிலையில், அதற்கு அடுத்த நாளே உதயநிதி கோவையில் ரோட் ஷோ நடத்தினார். அதேபோல, வேங்கை வயல் விவகாரத்தை விஜய் கையில் எடுக்க முயற்சித்தபோதுதான், அவசர அவசரமாக  இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை சிபிசிஐடி முடித்தது.
 
அதேபோல, கோவையை அடுத்து மதுரையில் விஜய் பூத் கமிட்டி மாநாடு நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஜய்க்கு முன்பே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மதுரை செல்ல இருப்பதாகவும், கட்சியின் இருப்பை காட்டிக் கொள்ள அவர் மதுரைக்கு விஜயம் செய்ய இருப்பதாகவும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
 
எனவே, விஜயை பார்த்து திமுக அச்சமடைந்திருப்பது உண்மைதான் என்பது இதிலிருந்து தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments