Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் இரும்பு கம்பி; ரயிலை கவிழ்க்க சதி?? – மதுரை அருகே பரபரப்பு!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (09:41 IST)
சென்னையிலிருந்து செல்லும் குருவாயூர் விரைவு ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு விரைவு ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த ரயில் திருமங்கலத்திலிருந்து கள்ளிக்குடி வழியில் சென்றுக் கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்துள்ளது.

அதன்மீது ரயில் ஏறியதால் இரும்பு கம்பிகள் உடைந்து சிதறின. இதனால் ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் பயணிகள் அலறினர். உடனடியாக ரயிலை நிறுத்திய ஓட்டுனர். சத்தம் வந்த பெட்டியின் அருகே சோதனை செய்தபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்ட இரும்பு கம்பி துண்டாகி கிடந்துள்ளது. மேலும் அது உடைந்து சிதறியதில் ரயில் பெட்டியின் படிக்கட்டுகளும், தண்டவாளத்தின் ஸ்லீப்பர் கட்டைகள் சிலவும் சேதம் அடைந்திருந்தன.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விரைந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அரைமணி நேரம் கழித்து ரயில் புறப்பட்டு சென்ற நிலையில், ரயிலை கவிழ்க்கும் திட்டத்தில் தண்டவாளத்தில் கம்பி வைக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments