Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்ப்புகளை மீறி தமிழகத்தில் நடந்த இரோம் சர்மிளா திருமணம்....

Advertiesment
எதிர்ப்புகளை மீறி தமிழகத்தில் நடந்த இரோம் சர்மிளா திருமணம்....
, வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (13:19 IST)
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் சர்மிளா பல எதிர்ப்புகளை மீறி தமிழகத்தில் இன்று திருமணம் செய்து கொண்டார்.


 

 
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சட்ட ஆயுதத்திற்கு எதிராக பல வருடங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா.  இதனால் அடிக்கடி இவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. அந்நிலையில், தனது போராட்டத்தை கைவிட்ட இரோம் சர்மிளா, மணிப்பூரில் நடைபெற்ற கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்தார். எனவே, பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக கூறிய அவர் பல்வேறு ஊர்களுக்கும் சுற்றுப்பயணம் செய்தார்.
 
கடந்த மூன்று மாதமாக லண்டனை சேர்ந்த தனது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோ என்பவருடன் கொடைக்கானலில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.  கொடைக்கானலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்யப்போவதன் மனுவை அவர்கள் இருவரும் அளித்தனர். 
 
ஆனால், அவர்களின் திருமணத்தை கொடைக்கானலில் நடத்தக்கூடாது என இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களின் ஆட்சேபனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து, இன்று சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தனது காதலருடன் வந்த இரோம் சர்மிளா, அங்கு அவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மகன் ஒரு அப்பாவி - திலீப்பின் தாயார் உருக்கம்