நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஐபிஎல் போராட்டம்: தெறிக்க விட்ட தமிழர்கள்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (15:47 IST)
சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தை ஆளுங்கட்சி என்பதால் அதிமுக தலையிடவில்லை, ஐபிஎல் அணிகளில் ஒன்றின் உரிமையாளராக இருப்பதால் திமுகவும் இந்த போராட்டத்தை கையில் எடுக்கவில்லை. ஆனால் சிறுசிறு கட்சிகளும் அமைப்புகளும் திரையுலக பிரபலங்களும் இந்த பிரச்சனையை தீவிரமாக கையில் எடுத்து சென்னையை சில மணி நேரங்கள் ஸ்தம்பிக்க வைத்தனர்.
 
இந்த நிலையில் ஐபிஎல் என்பது உலகின் கவனத்தை கவரும் போட்டி என்பதால் இதற்கு எதிரான போராட்டமும் உலகின் கவனத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் காவிரி பிரச்சனை குறித்து தங்கள் டுவிட்டரில் பதிவு செய்து வரும் நிலையில் இன்றைய நியூயார்க் டைம்ஸ் இதழிலும் சென்னையில் நடந்த போராட்டம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
 
இருமாநிலங்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த பிரச்சனை சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின்னர் அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது. தற்போது ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி  வெளியாகியுள்ளதஉலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனினும் இந்த போராட்டத்தால் காவிரி பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

திருப்பரங்குன்ற விவகாரம்!.. அமைதியாக இருக்கும் விஜய்!.. காரணம் என்ன?..

அமித்ஷாவுன் சந்திப்பு ஏன்?.. ஓப்பனாக சொல்லிட்டாரே ஓபிஎஸ்!...

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments