பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க மறுத்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதலாக பாஜகவின் கூட்டணியில் இருந்து வந்தவர் அதிமுக தொஉமீகு தலைவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் சமீபத்தில் அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கண்டுகொள்ளாததாக கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கிடைக்காததால் அப்செட் ஆன ஓபிஎஸ், அதன்பின்னர் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
புதிய கட்சி தொடங்கி விஜய்யுடன் அவர் கூட்டணி அமைப்பார் என்று பேசிக் கொள்ளப்பட்ட நிலையில், நேற்று நடைபயிற்சி கேப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இரண்டு முறை சந்திப்பை நடத்தியுள்ளார் ஓபிஎஸ். இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக உடனடியாக ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்டு 26ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் அவருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாக தமிழக பாஜக தரப்பு ஓபிஎஸ்க்கு வலைவீசியும், அதனை ஏற்க ஓபிஎஸ் மறுத்துவிட்டாராம்.
தற்போது பாஜக கூட்டணியில் அதிமுக, தமாக உள்ளிட்ட சில கட்சிகளே உள்ள நிலையில் ஓபிஎஸ், தேமுதிக, பாமக போன்றவற்றின் நிலைபாடுதான் சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்ஸின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Edit by Prasanth.K