திமுக எம்.எல்.ஏக்கள், வக்கீல்கள் வாக்குவாதம்: சர்ச்சையாகும் கைது!

Webdunia
சனி, 23 மே 2020 (08:54 IST)
கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றதாக தகவல். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.   
 
இது சம்மந்தமாக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இப்போது அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம், இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர். இது கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
 
சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக தெரிகிறது. 
 
விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை பார்க்க அனுமதிக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments