Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

சென்னையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதல்! – புதுமுக நடிகர் பலி!

Advertiesment
Tamilnadu
, செவ்வாய், 29 மார்ச் 2022 (15:24 IST)
சென்னை செங்குன்றம் பகுதியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் புதுமுக நடிகர் பலியானார்.

சென்னை செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் ஜீவா தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் புதிதாக எடுக்கப்பட்டு வரும் செங்குன்றம் என்ற திரைப்படத்தில் புதுமுக நாயகனாக நடித்து வருகின்றார்.

நேற்று முன்தினம் ஷூட்டிங் முடித்துவிட்டு ஜெயக்குமார் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, செங்குன்றம் – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் நேர் எதிரே வந்த சரவணன் என்பவரது பைக் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமார், சரவணன் இருவரும் பாடியநல்லூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டானில் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார், சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையை மறைத்த பனி.. மோதி குவிந்த வாகனங்கள்! – பரபரப்பை கிளப்பும் வீடியோ!